7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் : அமைச்சர் சி.வி.சண்முகம்

7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டப்படி தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும், இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஆளுநரின் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சி.வி.சண்முகம், தமிழக விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கிற எந்த திட்டமாக இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார். 

^