வயதான தம்பதியை கொலை செய்து 50 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

சென்னை அம்பத்தூரில் வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அரசு அச்சகத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஜெகதீசன் - விலாஷினி தம்பதியினர், ஆவடியை அடுத்த சேக்காட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர். வீட்டில் இருந்த 50 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.தகவலறிந்து சென்ற போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே, இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

^