சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!

சென்னையில் போலீசாரிடமே செல்போன் பறிக்க முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாப்பூரில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை பின்தொடர்ந்து சென்ற இருவர், அவர்களுடைய செல்போனை பறிக்க முயன்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் துரத்தி மடக்கிப் பிடித்தனர். இதன்பின் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கையில் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த பாஷித் இப்ராஹிம் ஆகிய இருவரும் தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

^