டிரேஸ் அமைப்பில் நடக்கும் மோசடி .

 . .திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் ஏழை மாணவர்களுக்காக அமைக்கபட்டது தான் டிரேஸ் அமைப்பு அந்த அமைப்பின் மூலமாக வசதியற்ற மாணவர், மாணவிகளுக்கு அரசு தேர்வுக்காக படிக்க இலவசமாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது இந்த அமைப்பிற்கு திருச்சி கலெக்டர் தான் தலைவராக இருக்கிறார் கடந்த 2 ஆண்டுகளாக இந்த அமைப்பில் புதிதாக எந்த கிராம புற மாணவர்களையும் சேர்க்கவில்லை? இந்த டிரேஸ் அமைப்பில் எந்த நேரமும் படிக்கலாம்? என்கிற நிலைமை மாறி, காலையில் 10 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் தான் அனுமதி என போர்டு வைத்து விட்டார்கள் கிராம புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் இதை பொருளாளர் சேவை கோவிந்தராஜ்விடம் போய் பேசி இருக்கிறார்கள் அதன் பிறகு காலை 8 மணியில் இருந்து, மாலை 6 மணி வரைக்கும் டிரேஸ் அமைப்பு திறந்து இருக்கும் என அறிவித்து இருக்கிறார்கள் அத்துடன் சமீபகாலமாக இந்த டிரேஸ் அமைப்பில் இருக்கிற பாத்ரூம்மை பூட்டி விட்டார்கள் அதனால் படிக்கிற பெண்கள் மிக சிரமத்திற்கு உள்ளாகி , டிரேஸ்சில் படிக்க வருவதை நிறுத்தி கொண்டு விட்டார்கள் அதை கேட்டால், பாத்ரூம் பழுதாகி இருக்கிறது. அதை உபயோகப்படுத்தினால், கீழ் ஃப்ளோரில் போய் விழுகிறது என நொண்டி சாக்கு சொல்லி படிக்க வருகிற கிராம புற மாணவிகளை தவிர்த்து விட்டார்கள் தற்போது ராதா என்கிற பயிற்சி ஆசிரியரை நியமனம் செய்து இருக்கிறார்கள் இவர் சேவை கோவிந்தராஜூவின் பேட்டவாய்த்தலை பள்ளியில் வேலை பார்த்தவர். தனக்கு தமிழ் தெரியாது ? ஆங்கிலத்தில் கேளுங்கள் என கிராம புற மாணவர்களை புறகணிக்கிறார் அவர் சரியாக பயிற்சி வகுப்புக்கு வரவில்லை என்றாலும், சம்பளம் பக்காவா கொடுக்கபடுகிறது என படிக்கிற மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். திருச்சி கலெக்டர் ராசாமணி, கலெக்டர் சவுண்டய்யா, கலெக்டர் ஜெயஸ்ரீ இருந்த போது எப்படி சிறப்பாக நடந்ததோ, அதே போல் இந்த டிரேஸ் அமைப்பை சீரமைக்க வேண்டும் என ஏழை மாணவர்கள் கெஞ்சி கேட்கிறார்கள் மற்றவர்களின் சுயநலத்திற்காக ஏழை மாணவர்களை வஞ்சிக்க வேண்டாம்...! கலெக்டர் ராசாமணி நடவடிக்கை எடுப்பார்? ஏழை மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொள்வார் என நம்புகிறார்கள். செய்வாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்--!

^