தேவர் மகன் ..... 2 என பெயர் வைக்க மாட்டேன் ...கமல்

இந்தியன் 2 படத்தை அடுத்து தேவர் மகன் 2 படத்தை எடுக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதையடுத்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் கிருஷ்ணசாமி, தேவர் மகன் என்று எடுக்காமல், தேவேந்திரர் மகன் என்று எடுங்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு நடிகர் கருணாஸ், ‘சுயலாபத்துக்காக டாக்டர் கிருஷ்ணசாமி தேவர்மகன் 2 படத்தை எதிர்ப்பதாக’ கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், பேட்டி அளித்துள்ள கமல், இவ்விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அதில் “ராஜ் கமலின் 12ஆவது படம். நான் ரீமேக் செய்கிறேன் என்றால் புரியாது. அதற்காக அந்தத் தலைப்பை சொன்னேனே தவிர புதுப் படத்திற்கான பெயரை நான் இன்னும் சொல்லவில்லை. அந்தத் தலைப்பையும் வைக்க மாட்டேன்” என்றார். மேலும், டாக்டர் கிருஷ்ணசாமி தேவேந்திரன் மகன் என பெயர் வைக்க சொல்லி கோரிக்கை வைத்தாரே, அது பரிசீலிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “அவர் கோரிக்கை வைத்துக்கொண்டே இருப்பார். அதைப் பரிசீலிக்க மாட்டேன். அவர் கதைக்கு அது ஒத்து வரும். நம்ம கதைக்கு அது ஒத்து வர வேண்டுமில்லையா. விட்ட இடத்தைப் பிடிக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார் கிருஷ்ணசாமி. அவருக்கு இந்த பஸ்ஸில் டிக்கெட் கிடையாது” என்று கூறியுள்ளார்.

^