காங்.,கை கிண்டலடித்த ராஜ்நாத்

மாப்பிள்ளை இல்லாமல் திருமண ஊர்வலம் நடத்துவது போல், காங்., நிலைமை உள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் கூறினார்.மத்திய பிரதேசத்தில் வரும், ௨௮ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. 

பிரசாரத்துக்காக, மத்திய பிரதேசத்துக்கு நேற்று வந்த, ராஜ்நாத் சிங், போபாலில் நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடி கூறிய நல்ல நாட்கள், இப்போது வந்து விட்டன; அதை ஏற்க முடியாமல், சிலர் வேண்டுமென்றே விமர்சிக்கின்றனர்.பா.ஜ., எப்போதும், பிரதமர் வேட்பாளர், முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தான், தேர்தலில் போட்டியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. ஆனால், காங்., சார்பில், எந்த மாநிலத்திலும் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.மத்திய பிரதேசத்தில் உள்ள, காங்., தலைவர்கள், தாங்கள் முதல்வராக வேண்டும் என்ற கனவில் உள்ளனர். மாப்பிள்ளை இல்லாமல், திருமண ஊர்வலம் நடத்துவது போல், காங்., நிலைமை உள்ளது. இவ்வாறு சிங் கூறினார். 

^