​ஆண்டிபட்டியை தக்க வைக்கும் தங்க தமிழ்செல்வன்

. .

ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த தங்க தமிழ்செல்வன் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுவதற்குத் தயாராகிறார். நவம்பர் 3 ஆம் தேதி ஆண்டிபட்டியில் அவர் நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்செல்வன், “எம்.ஜி.ஆர். அம்மா ஆகிய இரண்டு தலைவர்களின் தொகுதியாக இருந்தது ஆண்டிபட்டி. அதன் பிறகு நான் மக்களால் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் என்னை தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். இப்போது இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். கடந்த ஒன்றரை வருடமாக ஆண்டிபட்டியை எடப்பாடியும், பன்னீரும் சேர்ந்து புறக்கணித்துவிட்டார்கள். குக்கிராமங்கள் நிறைந்த ஆண்டிபட்டிக்கு குடிதண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் செய்யவில்லை. எனவே ஆண்டிபட்டி மக்கள் இதை யோசிக்க வேண்டும். இந்த மைனாரிட்டி Ü󲂰 மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று பேசினார் தங்க தமிழ்ச்செல்வன். ஆண்டிபட்டி தொகுதி மக்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து தினகரன் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் அவர் கூட்டத்தில் பேசினார். ஆண்டிபட்டி ஒன்றிய ஆலோசனைக் கூட்டத்துக்கே இவ்வளவு கூட்டமா என்று அதிமுக தரப்பு யோசிக்கத் தொடங்கிவிட்டது. ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று எடப்பாடியும், ஓ,பன்னீரும் ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆண்டிபட்டி தொகுதியின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இதுபற்றி அதிமுக தலைமையில் நடந்த ஆலோசனையில், “ஆர்.கே.நகர் என்பது அம்மா கடைசியாக நின்று வென்ற தொகுதி. அதேபோல ஆண்டிபட்டி என்பது எம்.ஜி.ஆருக்கும் சரி, அம்மாவுக்கும் சரி ராசியான தொகுதி. மற்ற இருபது தொகுதிகளை விட ஆண்டிபட்டி நமக்கு முக்கியமானது. ஆர்..கே.நகரைப் போல ஆண்டிபட்டியையும் தினகரன் மீண்டும் கைப்பற்றிவிட்டால் சென் டிமென் ட்டாக மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனவே ஆண்டிபட்டியை எப்படியாவது நாம் கைப்பற்ற வேண்டும்” என்று திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதாம். பக்கத்து மாவட்டமான திண்டுக்கல்லைச் சேர்ந்த நத்தம் விசுவநாதன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

^