பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பைனலில் ஜோகோவிச்

பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரானா பாரிஸ் மாஸ்டர்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நட்சத்திர வீரர நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். அரை இறுதியில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரருடன் மோதிய ஜோகோவிச் 7-6 (8-6) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பெடரர் 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் இரு வீரர்களும் விடாப்பிடியாகப் போராட, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.அந்த செட்டை 7-6 (7-3) என வசப்படுத்திய ஜோகோவிச் 7-6 (8-6), 5-7, 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 2 நிமிடத்துக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் கரென் கச்சனோவுடன் ஜோகோவிச் மோதுகிறார். கடைசியாக விளையாடிய 22 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள ஜோகோவிச், பாரிஸ் தொடரில் தனது 33வது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

^