அலறியடித்து ஓடிய நடிகை

தினமும் யாராவது ஒரு நடிகை தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றார். வேறென்ன வேண்டும். பீப், உச்சம், தெலுங்கில் ராம ராம கிருஷ்ண கிருஷ்ண படங்களில் நடித்திருப்பவர் பிரெர்னா கண்ணா. அவர் கூறியதாவது: என் தந்தை வயதில் உள்ள ஒரு நடிகர் தான் படம் இயக்க உள்ளதாகவும் அப்படத்தில் எனக்கு நல்ல தொரு கதாபாத்திரம் தருவதாகவும் கூறி என்னை ஃபைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றுக்கு வரச் சொன்னார். அவர் சொன்னபடி அந்த ஓட்டலுக்கு சென்று அவரை சந்தித்தேன். என்னுடைய கண்களிலிருந்த ஐலைனர் (கண்மை) அழித்துவிட்டு வரும்படி சொன்னார். சரி என்று கூறிவிட்டு நான் குளியல் அறைக்கு சென்று ஐலைனரை அழித்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று என் பின்னால் குளியல் அறைக்கு வந்த அந்த நடிகர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் தர முயன்றார். அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். அவருக்கும் என் வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் அவருடைய நடவடிக்கை எனக்கு அதிர்ச்சி அளித்தது. இவ்வாறு பிரெர்னா கண்ணா கூறினார்.

^