எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை

பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய் வளர்கின்ற கொடியினம். * ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக உண்ணும் துவையல், ஊறுகாய், அடை போன்றவற்றில் உபயோகிக்கப்படுகிறது. * பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை, முப்பிரண்டை என பல பிரிவுகள் உண்டு. * பிரண்டையினால் வயிற்றுவலி, ஆசனவாய் எரிச்சல், ரத்தம் வரும் நோயான ரத்த மூலம், மூளை மூலம் மற்றும் கைகால் உளைச்சல் நீங்கும். பசி உண்டாகும். * பிரண்டையின் வேரை வெந்நீரில் குழைத்து, மேற்புறமாக பூசி வர வீக்கம் குறையும். * பிரண்டையை பச்சையாக, நன்றாக அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, அடிபட்ட வீக்கத்தில் வைத்து கட்டினால் வீக்கம், ரத்தக்கட்டு குணமாகும். * எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கிறது. * பிரண்டை, இலந்தை, வேப்ப ஈர்க்கு, முருக்கள் விதை, ஓமம் இவைகளை முறைப்படி குடிநீரிலிட்டு குடிக்க வயிற்றுப்புழுக்கள் நீங்கும்.

^