​சர்கார் படத்திற்கு தொடரும் சர்ச்சை..! .

 . வருண் ராஜேந்திரன் என்பவர் , என்னுடைய செங்கோல் கதை தான் சர்கார் என்கிற பெயரில் முருகதாஸ் எடுக்கிறார் என ஏற்கனவே நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் இந்த சூழ்நிலையில் , தாகபூமி என்கிற என்னுடைய குறும்படத்தை தான் கத்தி என்கிற பெயரில் முருகதாஸ் எடுத்தார் என குறும்பட இயக்குநர் ராஜசேகர் நீதிமன்றம் நாடி இருக்கிறார். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை, சர்கார் படத்திற்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருக்கிறார் காப்புரிமை சட்டத்தின் படி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது 4 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. வீட்டிற்கும், நீதிமன்றத்திற்கும் 4 ஆண்டுகள் அலைந்து மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்படைந்து இருக்கிறேன் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் படத்தை திரையிடக்கூடாது என வழக்கு தொடர்ந்து இருக்கிறேன் என ராஜசேகர் தெரிவித்தார் இந்த சூழ்நிலையில் கே.ரங்கராஜ் என்பவரும் கத்தி திரைபடம் என்னுடைய கதை என வழக்கு தொடர்ந்து இருக்கிறார் தீபாவளிக்கு சர்கார் ரீலீஸாகுமா? என்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் டென்ஷனை உருவாக்கி இருக்கிறது

^