சர்கார் பட கதை என்னுடையது. நீதிமன்றம் செல்லும் வருண்

 . .

சர்கார் படக்கதை என்னுடையது என வருண் ராஜேந்திரன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார் பொக்கிஷம், சுக்ரன், பெண்சிங்கம் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் வருண் ராஜேந்திரன் சுக்ரன் படத்தில் பணியாற்றும் போது, எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த கதையை கேட்டு விஜய்யை வைத்து இந்த படத்தை பண்ணலாம், நீ விஜய் பக்கத்தில் இருந்தே, அவருக்கு தகுந்தாற் போல் டயலாக் எழுது என சொல்லி இருக்கிறார் செங்கோல் என்கிற பெயரில் எழுதப்பட்ட இந்த கதை பிரகாஷ்ராஜ் முதல் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வரை அனைவரும் கேட்டு இருக்கிறார்கள் வருணின் புகாரை தீர விசாரித்த எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ். செங்கோல் கதை தான் சர்கார் பட கதை என ஒரு மனதாக முடிவெடுத்து விட்டார். ஆனால், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க விடாமல் எழுத்தாளர் சங்கத்திக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளது எதிர்ப்பையும் தாண்டி பாக்யராஜ் வருணுக்கு ஆதரவாக 7 பக்கம் கடிதம் கொடுத்து விட்டார் அதை வைத்து கொண்டு வருண் நீதிமன்றத்தை நாட இருக்கிறார்

^