இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பு : ஜனவரி 5-ம் தேதி தோ்தல்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு வரும் ஜனவரி 5-ம் தேதி தோ்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 19-ம் தேதி துவங்குகிறது. நவம்பர் 26 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜனவரி 17-ல் இலங்கை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதேநாளில் நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி நீக்கத்தை ஏற்க மறுத்துள்ள ரணில், \'நானே பிரதமராக நீடிக்கிறேன்\' என்று அறிவித்தார். இதனை அடுத்து பிரதமர் பதவியை தக்கவைக்க ரணில் விக்கிரமசிங்கே - ராஜபக்சே இடையே கடும் போட்டி நிலவியது. இந்த பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு வரும் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவித்த நிலையில் நேற்று இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

^