எம்எல்ஏகளின் அறைக்கு சீல்..! . .

. .

18பேரையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ள அதே சமயத்தில் சபாநாயகர், கொறடா ஆகியோர் கேவியட் மனுக்களை முன்கூட்டியே தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் 18 பேரின் எம்.எல்.ஏ. விடுதி அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாகச் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதியன்று உத்தரவிட்டார். எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தங்கும் விடுதி உள்பட சட்டமன்ற உறுப்பினர் சலுகைகளுக்கான தகுதியை இழந்துவிட்டனர். ஆனால் இதுவரை எம்.எல்.ஏ. விடுதி அறையைக் காலி செய்யவில்லை. எனவே சபாநாயகரின் உத்தரவுப்படி 18 பேரின் அறைகளும் பூட்டி சீல் வைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உடமைகளை எடுத்துச் செல்லுமாறும் நிலுவையில் உள்ள வாடகையை உடனடியாக செலுத்துமாறும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அறைகளின் கதவில், “இந்தக் குடியிருப்பு சட்டப்பேரவைச் செயலகம் வசம் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனவே விடுதி அறையை அனுமதியில்லாமல் யாரும் திறக்கக் கூடாது” என்று நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது.

^